நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது விஜய்யின் ‘சர்கார்’: சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

0a1bவிஜய்யின் ;சர்கார்’ திரைப்படம் வருகிற தீபாவளி நாளான நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இப்படம் தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. எனவே, தீபாவளிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையான நவம்பர் 2ஆம் தேதி இப்படம் வெளியாகலாம் என சமூக வலைத்தளங்களில் யூகத்தகவல் பரவியது.

இந்நிலையில், தீபாவளி நாளான நவம்பர் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ‘சர்கார்’ ரிலீஸ் ஆகிறது என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று தான் விஜய்யின் ‘மெர்சல்’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.