உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டி!

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலை மக்கள் நலக் கூட்டணி மற்றும் தமாகாவுடன் இணைந்து தேமுதிக எதிர்கொள்கிறது. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 இடங்கள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

தேமுதிகவின் முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும், 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும், 5-ம் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

5 கட்டமாக 93 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 11 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விவரம்:

 1. உளுந்தூர்பேட்டை – விஜயகாந்த்
 2. விழுப்புரம் – .எல்.வெங்கடேசன்
 3. ரிஷிவந்தியம் -.ஜெ.பி.வின்சென்ட் ஜெயராஜ்
 4. சங்கராபுரம் – .ஆர்.கோவிந்தன்
 5. மேட்டூர் – .ஆர்.பூபதி
 1. உடுமலைபேட்டை – எஸ்.கணேஷ்குமார்
 2. ஆத்தூர் (திண்டுக்கல்) – ம.பாக்கிய செல்வராஜ்
 3. ஒரத்தநாடு – ப.இராமநாதன்
 4. விராலிமலை – ஏ.ஆர்.கார்த்திகேயன்
 5. மன்னார்குடி – ஏ.முருகையன்பாபு
 6. திண்டிவனம் (தனி) – மு.உதயகுமார்