விடுதலை சிறுத்தைகளின் முதல் பட்டியல்: குன்னம் – ஆளூர் ஷாநவாஸ்!

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார். அதன்படி அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆளூர் ஷாநவாஸ், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார். அதன் விவரம்:

புவனகிரி- சிந்தனை செல்வன்

குன்னம்- ஆளூர் ஷாநவாஸ்

மயிலம்- எஸ்.எஸ்.பாலாஜி

சோளிங்கநல்லூர்- இரா.பன்னீர்தாஸ்

செய்யூர் – எழில் கரோலின்

சேலம் தெற்கு- கோ.ஜெயசந்திரன்

ஊத்தங்கரை – சி.கிருஷ்ணன் என்ற கனியமுதன்

துறையூர் – சுஜாதேவி என்ற ஆதிமொழி

வந்தவாசி – மேத்தா ரமேஷ்

ராசிபுரம்- க.அர்ஜூன்

மேலூர் – அப்துல் ரகுமான்.

குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ் கூறியிருப்பது: “தலைவரின் சொந்த ஊரான அங்கனூரை உள்ளடக்கிய தொகுதி. தலைவர் வென்ற சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட தொகுதி. வெற்றி வாய்ப்புள்ள குன்னம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவருக்கு நன்றி.”