“ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதலை அழகாக சித்தரிக்கிறது ‘தர்மதுரை” – திருமாவளவன்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ திரைப்படம் இன்று (19ஆம் தேதி) உலகமெங்கும் வெளியாகிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர்.

ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட தன் சகாக்களுடன் வந்து இப்படத்தைப் பார்த்த திருமாவளவன், பின்னர் கூறுகையில், “ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி” என்று பாராட்டினார். “தர்மதுரை’ படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி” என்றார் அவர்.

0a6g

Read previous post:
0a6g
“தர்மதுரை’ நல்ல கதை”: மனம் நெகிழ்ந்தார் ராமதாஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ திரைப்படம் இன்று (19ஆம் தேதி) உலகமெங்கும் வெளியாகிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள

Close