“தர்மதுரை’ நல்ல கதை”: மனம் நெகிழ்ந்தார் ராமதாஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ திரைப்படம் இன்று (19ஆம் தேதி) உலகமெங்கும் வெளியாகிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், அவரது மாமனாரும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி மற்றும் இவர்களின் குடும்பத்தினருக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர்.

மருத்துவர்கள் பற்றிய படமான ‘தர்மதுரை’யை, தனது மருத்துவ குடும்பத்துடன் பார்த்த ராமதாஸ், மனம் நெகிழ்ந்து பாராட்டினார். “நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை” என்றார் ராமதாஸ்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை ‘தர்மதுரை’ தருகிறது” என்றார் அன்புமணி ராமதாஸ்.

0a7a