இரண்டே ஆண்டுகளில் தேசத்தை தரிசு ஆக்கி விட்டார்கள் படுபாவிகள்!
சில்லறைத் தட்டுப்பாட்டினால் எல்லாத் தொழில்களும் ஸ்தம்பித்து, கதவடைப்பு நடத்தும் எல்லைக்குப் போய் விட்டார்கள்.
கோதுமை விளைச்சலும், நெல் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மை சீரழிக்கப்பட்டு விட்டது.
பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் பஞ்சத்தை எதிர்கொள்ளும் பயத்தோடு ஊர் திரும்பத் தொடங்கி விட்டார்கள்.
சிறு வியாபாரிகளின் வியாபாரம் தரை மட்டத்தைத் தொட்டு விட்டது.
உற்பத்திக் கூடங்கள் புகை கக்குவதை நிறுத்தி விட்டன.
பெரும்பாலான மக்களின் உழைப்பு நேரம் வங்கி வாசலில் வீணாகிக்கொண்டு இருக்கிறது.
தேசத் தேரின் ராட்சத சக்கரங்கள் டக் என ஓட்டத்தை நிறுத்தி விட்டன.
இனி 6 மாதம் கழித்து பணப்புழக்கம் சீரானாலும், இந்தியா கிபி 2000-ல் இருந்த நிலைக்குத் திரும்பவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.
இந்திய அரசு அச்சடிக்கும் நோட்டு நீண்டநாள் புழக்கத்தில் இருக்கும் என்று ஜனங்கள் இனி ஒருபோதும் நம்பவே மாட்டார்கள்.
மத்திய அரசின் பொறுப்பற்ற அராஜகத்தை மக்களால் ஒருபோதும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது.
இரண்டே ஆண்டுகளில் தேசத்தை தரிசு ஆக்கி விட்டார்கள் படுபாவிகள்…!
Gnanabharathi Chinnasamy