“வரும் காலங்களில் இணையதளம் இல்லாமல் சினிமா இயங்க முடியாது!” – எஸ்.வி.சேகர்

“இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களில் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது. ஏன், திரைப்படங்களே கூட  இணையதளத்தில் வெளியிடப்படலாம்” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடைபெற்ற புதிய இணையதளம் ஒன்றின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் தங்கசாமி, ரத்தின சிவா, நடிகர்கள் காளி வெங்கட், சௌந்தர்ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்