ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

தேவையான செயற்கை சுவாச உதவி, நோய் எதிர்ப்பு ஆன்ட்டி பயாடிக் சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிற ஆதரவுச் சிகிச்சைகளோடு பிசியோதெரபி சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர், பேராசிரியர் டாக்டர் ஜி.கில்னானி, அக்டோபர் 9, 10 தேதிகளில் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்து, முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தார். பிறகு அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது அப்போலோ வழங்கி வரும் சிகிச்சை முறைகளுக்கு கில்னானி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அப்போலோவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0a