ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திரளும் தமிழ் திரையுலகம்!

புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்துவருகிறார்கள். அவற்றில் சில:-

கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

கௌதமி: இதனால் தான் அம்மா ஓபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார். தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் அவருக்கு இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கான நீதி. அம்மாவுக்கான நீதி

குஷ்பு: ஒரு நாயகன் உதயமாகிறான்…

மன்சூர் அலிகான்: ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரிஜினல் பன்னீர்செல்வம் ஆகி இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிண்டல்களை எதிர்கொண்டவர் அவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை உடைக்கும் போராட்டத்தை நடத்துவேன்.

ஜி.வி.பிரகாஷ் குமார்: எவன் வந்து அடக்குவான், மறத்தமிழ் மகன் உனை, இறப்பினி ஒரு முறை, துணிந்து நீ பகை உடை .உலகுக்கு உரக்க சொல் !#அடங்காதே

சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது.

 ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.

அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.

இமான்: இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS

ஆதிக் ரவிச்சந்திரன்: ‘கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!’ #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்து கிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu

தயா அழகிரி: ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே! எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார்..

எஸ்.வி.சேகர்: அதிமுகவில் ஓர் ஆண் மகன்’. ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் ADMK எனும் கட்சி. வரலாறு திரும்புகிறதா?!

கங்கை அமரன்: சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துகளை அபகரிக்க இவர் உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா? ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பன்னீர்செல்வம் உண்மையான ஆம்பளை. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில், எதற்காக முதல்வராக வரவேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார்? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது.