உள்ளங்களை கொள்ளையடிக்கும் எங்கள்  ‘திதிகூ!” – சாட்னா டைட்டஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவைச் சேர்ந்த சாட்னா டைட்டஸ். இவர் தற்போது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ (சுருக்கமாக ‘திதிகூ’)  திரைப்படத்தில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

‘டூ மூவிபஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’  தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில், ஒளிப்பதிவாளராக ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளராக அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளராக  வெங்கட் (மிருதன்), கலை இயக்குனராக  ரெமியன் (அம்புலி, பண்டிகை) மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக  பில்லா ஜெகன் பணிபுரிகிறார்கள்.

“பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு  ஏறத்தாழ அதே மாதிரியான கதாபாத்திரங்கள்  தான் வந்து கொண்டிருக்கிறது. நான் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாபாத்திரமும்  தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் பதிய வேண்டும். இந்த கதாபாத்திரத்தை சாட்னா டைட்டஸ் கன கச்சிதமாக திரையில் பிரதிபலித்து இருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் தருணங்களை தான் என்னுடைய முழுமையான வெற்றியாக நான் கருதுகிறேன். அப்படி நான் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் இந்த ‘திதிகூ’ நிச்சயமாக தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை  பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

“எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும்  மாடர்ன் பெண்ணாக இந்த  படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை நான் பழக்கப்படாத ஒரு வேடம் என்பதால், எனக்கு இந்த கதாபாத்திரத்தை பற்றி நன்கு அறிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது…ஒரு மாடர்ன் பெண்ணின் நடை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிவார்கள், பேசும் விதம், மற்றவர்கள் மத்தியில் தைரியமாக பேசக்கூடிய தோரணை என பல குணாதிசயங்களை இந்த படத்திற்காக நான்  உள்வாங்கி இருக்கிறேன்.

“என்னுடன்  இணைந்து நடிக்கும் கயல் சந்திரன் ஒரு ஹீரோவாக இல்லாமல் எனக்கு சிறந்த நண்பராகவும், படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு பக்கபலமாகவும் செயல்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது…நிச்சயம் எங்களின் ‘திதிகூ’, தமிழக ரசிகர்களின்  உள்ளங்களை கொள்ளையடித்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தமிழை சரளமாக பேசும் சாட்னா டைட்டஸ்.

Read previous post:
0a4z
பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம் – வாழ்க்கை வரலாறு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.

Close