ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் சரத்குமார்!

காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில், ஸ்ரீகிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையாக வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும், மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், ஆர்ஜே ப்ளேட் சங்கர், ஆர்ஜே மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – பி.கே.வர்மா

படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்

சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்

நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்

ஊடகத் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – எம்.செந்தில்

நிர்வாக தயாரிப்பு – எம்.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், டி.ரகுநாதன்