“ஹெச்.ராஜா சார், கவுத்துறாதீங்க”: உதயநிதி ஸ்டாலின் பட இயக்குனர் கிண்டல்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் வருகிற 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘இப்படை வெல்லும்’  படத்தை விளம்பரப்படுத்த செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, “‘மெர்சல்’ படத்துக்கு முழு விளம்பரம் கொடுத்தது தமிழக பாரதிய ஜனதா கட்சி தான். அதுபோல் என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்” என்று குறும்பாக கூறினார். இது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

0a1dஉதயநிதிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு, இந்துத்துவ தீவிரவாதியும், பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒண்ணும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்” என்று நக்கலடித்தார்.

ஹெச்.ராஜா ஷர்மாவின் இந்த ட்வீட்டால் உற்சாகம் அடைந்துள்ள ‘இப்படை வெல்லும்’ பட இயக்குநர் கவுரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹெச்.ராஜா சார், தங்களுடைய விளம்பரப்படுத்துதலுக்கு நன்றி. எங்களுடைய முழு குழுவும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கலக்குங்க சார். கவுத்துறாதீங்க” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.