“துக்ளக்” பாணி அறிவிப்புக்காக மோடிக்கு ‘ஆயில்’ அடித்த தமிழ் திரையுலக பிரபலங்கள்!

“500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என ‘துக்ளக்’ பாணியில் திடுதிப்பென அறிவித்து, சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களையும், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளையும் அவதிப்பட வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்புக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்து மோடிக்கு ‘ஆயில்’ அடித்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்த்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் பிரதமர் மோடி ஜி. புதிய இந்தியா பிறந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துக்காக ரஜினிக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள மோடி, “நன்றி. வளமானதும் எல்லா தரப்புகளையும் உள்ளடக்கக் கூடிய ஊழலற்றதுமான இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் தோளோடு தோள் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வணக்கங்கள் திரு. மோடி. இந்த முடிவு கட்சிகள் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட வேண்டும். முக்கியமாக ஒழுங்காக வரி கட்டுபவர்களால்…” என்று தெரிவித்துள்ளார்.

கமலுக்கு பதிலளித்துள்ள மோடி, “இந்த முடிவு, மேம்பட்ட இந்தியாவில் வாழத் தகுதியான நேர்மையான குடிமகன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விஷால்: மோடி ஜி, மாஸ்டர் ஸ்ட்ரோக். புதிய இந்தியாவை கொண்டு வாருங்கள். இதை ஏற்றுக்கொள்ள கொஞ்ச நாளாகும், புரட்சி

தனுஷ்: அசாத்தியமான முடிவு மோடிஜி. வரலாற்றுச் சிறப்புமிக்கது. தலை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த். தூய்மையான இந்தியா. பெருமைப்படும் இந்தியன்.

ஐஸ்வர்யா தனுஷ்: வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு நரேந்திரமோடி ஜி. ஊழலுக்கு எதிரான போராட்டம். ஜெய்ஹிந்த்.

சித்தார்த்: அன்புள்ள திரு. நரேந்திர மோடி. நீங்கள் ஒரு லெஜண்ட். தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் இன்றிரவு நன்றாக உறங்குவார்கள். இந்த நாளுக்கு நன்றி. தூய்மையான இந்தியா. ஜெய்ஹிந்த்.

அனிருத்: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த பிரதமரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்.

அதர்வா: ஊழலுக்கு அடி. காலம் மாறுகிறது, கனவு மெய்ப்படுகிறது. ஒரு மேம்பட்ட, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஜெய்ஹிந்த்.

முருகதாஸ்: வணக்கங்கள். ஊழலை எதிர்க்கும் மோடி. தைரியமான முடிவு. கருப்புப் பணத்துக்கு விழுந்த கடுமையான அடி.

லட்சுமி ராமகிருஷ்ணன்: வட போச்சே… கறுப்பு பணம் போச்சே… சூப்பர்…!

Read previous post:
0a
“மோடியின் திடீர் அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்களுக்கு அல்லாடும் மக்கள்”: பிடிஐ ரிப்போர்ட்!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில், பெட்ரோல் நிரப்புவதில் என்று அன்றாட வாழ்க்கையில்

Close