டி.எம்.சௌந்தரராஜனின் வரலாற்றை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சிகள்!

“இமயத்துடன்”என்ற தலைப்பில் திரைப்பட கல்லூரி மாணவர் திரு.விஜயராஜ் என்பவர், உலகமே போற்றும் பிரபல பின்னணிப் பாடகர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவருடனே 2002ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரையில் பயணித்து, தொலைக்காட்சிக்காக 150 எபிசோட் எடுத்து பக்காவாக முடித்து வைத்துவிட்டார்.

எல்லா தொலைக்காட்சி உரிமையாளர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து, ட்ரெய்லரையும்  போட்டுக்காட்டி, ஒளிபரப்புவதற்கு வாய்ப்புக் கேட்டுக்கேட்டு அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைந்துகொண்டே  இருக்கிறார்.

தினமும் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பாடல் காட்சிப்படங்களைப் போட்டு பணம் சம்பாதிக்கும் எல்லா தொலைக்காட்சிகளும் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடரை

(பிறந்து-வாழ்ந்த-வளர்ந்த இடங்கள்,

80-க்கும் மேற்பட்ட கலைஞர்களை நேரடியாக திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே அவரவர் இருப்பிடத்திற்கே சென்று கலந்துரையாடிய நிகழ்சிப்பதிவுகள்,

அற்புதமான – அபூர்வமான பாடல் காட்சிகள் – அபூர்வ தகவல்கள் அடங்கிய பதிவினை)

ஒளிபரப்புவதற்கு தயங்குகிறாகள்…. மழுப்பலான பதில்களைக்கூறி திரு.விஜயராஜ் அவர்களை அனுப்பிவிடுகிறார்கள்.

எப்படியும் “இமயத்துடன்”என்ற திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கு வழி பிறக்கும் என்று தினமும் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகங்களுக்கும் அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைகிறார்… அலைந்துகொண்டே இருக்கிறார்.

(அவரோடு இணைந்து நானும் அலைகிறேன்.)

திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் 94-வது(24-3-2016) பிறந்தநாளில் மிகவும் வேதனையோடு இதை பதிவு செய்கிறேன்.

– மேஜர்தாசன்