பாபி சிம்ஹா – ரேஷ்மி திருமணம் திருப்பதியில் நடந்தது!
‘உறுமீன்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாபி சிம்ஹா – ரேஷ்மி திருமணம் வெள்ளியன்று (22ஆம் தேதி) திருப்பதி திருமலையில் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (24ஆம் தேதி) சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுகிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
திரையில் காதலர்களாக நடித்தவர்கள் நிஜவாழ்க்கையில் தம்பதியர் ஆகியிருக்கிறார்கள்…
ஸ்வீட் எடு…! கொண்டாடு…!