ரஜினியின் ‘2.0’ பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா: மும்பையில் 20ஆம் தேதி நடக்கிறது!

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகம் என சொல்லப்படும் இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் இம்மாதம் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இவ்விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்பபட இருக்கிறது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர்.

மும்பை விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்றுக்கும் திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.