7ஆம் தேதி ஆளுநர் சென்னை வருகிறார்: 9ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவி ஏற்கிறார்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராகவும், எம்.ஜி.ஆர், ஜானகியம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வின் 5-வது முதல்வராகவும், ஜானகியம்மாள், ஜெயலலிதா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது பெண் முதல்வராகவும் சசிகலா பதவியேற்கிறார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் வரும் 7ஆம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். அதன்பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவார் சசிகலா.

அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளித்ததும், வரும் 9ஆம் தேதி முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.