சசிகலா முதல்வரா?: “ஒருத்தருக்கு பிடிக்கலேனா பரவால்ல; ஒருத்தருக்கு கூட பிடிக்கலேனா…?”

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கிறார். இது குறித்து சமூக வலைத்தள பதிவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சில:

Araathu R

எதிர்பார்த்தது போலவே அடித்துப் பிடித்து முதல்வர் ஆகப் போகிறார் சசிகலா. இப்போது மத்திய அரசோ, திமுகவோ இதில் செய்வதற்கு ஏதுமில்லை. ஆனால் மக்கள் செய்வதற்கு ஒன்று உள்ளது. 6 மாதத்திற்குள் தேர்தலை சந்திக்க களத்துக்கு வருவார் சசிகலா. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பலமான பொது வேட்பாளரை நிறுத்தலாம். மக்கள் ஜாதி பார்த்தோ, பணம் வாங்கிக்கொண்டோ ஓட்டுப் போடாமல், குறுக்கு வழியில், புழக்கடை வழியாக முதல்வர் ஆனவரை கடும் தோல்விக்குள்ளாகச் செய்ய வேண்டும். இதுதான் மக்கள் சக்தியை உறுதிப்படுத்தவும், ஜனநாயகம் தோற்கவில்லை என்று உரத்து சொல்லவும் நம் முன்னே இருக்கும் ஒரே வழி. ஆனால் மக்கள் மந்தை பணம் வாங்கிக்கொண்டும், சாதி பார்த்தும் ஓட்டு போட்டு சசிகலாவை ஜெயிக்க வைத்து விட்டது எனில், அதிமுகவில் இருக்கும் அடிமைகளாம் எம்எல்ஏக்களுக்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும்.

VIVEGAM™ @thala_satheesh

“சோழர் காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது”: நாஞ்சில் சம்பத்!

அடுத்து ஃபெராரி காருக்கு பிளானா?

Jerry Sundar @jerry_sundar

வாழ்நாளில் ஒருமுறை கூட மேடையில் பேசாத ஒருவர் முதல்வர் எனில் அதைவிட கொடுமை எதுவும்இல்லை.

கோயம்புத்தூரான் @Coimbatoraan

சசிகலாவிற்குத் திராணியிருந்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெறச் சொல்லுங்கள்.

பரம்பொருள் @paramporul

“அக்கா இட்லி சாப்பிட்டீங்களாக்கா”ன்னு கேட்டதுக்குலாம் சி.எம். போஸ்ட்ட குடுக்க முடியாதுங்க.

Jerry Sundar @jerry_sundar

அரசியலுக்கு வருவதற்கு முன்னாலேயே, எந்த வருமானமும் இல்லாத ஒருவர் மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் இருக்கிறது.

ArunkumarKanniyappan @KanchiArunkumar

ஒருத்தருக்கு பிடிக்கலேனா பரவால்ல

ஒருத்தருக்கு கூட பிடிக்கலேன்னா?

சூர்யா @surya

எனக்கு 35 வயசாகுது; இத்தனை நாள் அதிமுகவில் இருந்ததற்கு பெருமைப்பட்டவன்.

இன்று அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

rakesh @srakesh25

தேர்தலில் போட்டியிடாமல் ஒருவர் CM ஆவது நம்ம நாட்லதான்.

VijU RaM KrishnaN @Vijuvenkatram

நல்லவேளை… போன தேர்தல்ல ஜெயலலிதா பிரதமர் ஆகல; இல்லைனா, இன்று இந்தியாவோட நிலைமை என்ன ஆகியிருக்கும்?

Meenakshipuram Deivakumar Muthukumaraswamy

சசிகலா முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களிலும் பொது மக்களிடமும் காணப்படுகிறது. இதற்கான காரணங்களாக சொல்லப்படுவன:

ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் விலகவில்லை; சசிகலாவுக்கு ஜெயலலிதா கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பொறுப்பும் கொடுத்ததில்லை; சசிகலா மற்றும் அவருடைய உறவினர் மேல் இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதைத் தவிர சசிகலாவைப் பற்றி பொதுமக்களுக்கு எதுவும் தெரியவில்லை.

நைனா @Writter_Naina

இந்த ஆட்சி பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையின் கீழ் இல்லை!

பர்மா பஜார் நாகூர் கனி

மோடியே இந்நாட்டில் பிரதமராக ஆகும் போது, சசிகலா தமிழ்நாட்டின் CM ஆக கூடாதா??

Sukumar Perumalsamy

சசிகலா தோற்பார் என்பதை ஏற்கமுடியவில்லை… நம்ம மக்களை பத்தி நீங்க புரிஞ்சுக்கல. இங்க எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு..!

khushbusundar @khushsundar

ஒட்டுமொத்த பேரழிவு.. நாம் (மக்கள்) முடிந்தோம்.