விஜய் சேதுபதியை பாராட்டும் சீமான்! சாதி துவேஷம் செய்யும் தொண்டர்கள்!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி, வருகிற 11ஆம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது.

இப்பேரணியின் நோக்கம் நிறைவேற, இதில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ள விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்து நிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காக குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும். தொடர்ந்து போராடி ஏழ்வரை மீட்போம்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

ஆனால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும், அவர் தமிழருக்காக குரல் கொடுப்பது ஏமாற்று வேலை என்றும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

0a1w

நல்ல நோக்கத்துக்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி போன்ற ஒருவரை சாதி துவேஷம் பேசி புறக்கணிக்கலாமா? என்று இதை பலர் கண்டித்தும் வருகின்றனர்.

இது குறித்து மனோஜ் குமார் என்பவர் தனது பதிவில், “டிஎன்ஏ டெஸ்ட் வந்தாச்சு!!!

ஒரு பிரபலமான நடிகர், நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக பேசுவது என்பது, அந்த செய்தி அனைத்து மட்டத்தில் உள்ளோரையும் சென்று சேரும், அது ஏழு தமிழர் விடுதலைக் கோரிக்கையை மேலும் வலிமைப்பபடுத்தும் என்று தான் உண்மை உணர்வாளர்கள் பார்ப்பார்கள்.

அதை நாம், நாம் தமிழர் என்ற கேடுகெட்ட கூட்டத்திடம் எதிர்பார்க்க முடியாது.

யார் நமது கோரிக்கையை ஆதரிக்கிறார்கள்? யார் நமது பக்கம் நிற்கிறார்கள்? என்பதைப் பொறுத்து தான், யார் தமிழர்? என முடிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், இந்திய உளவுத் துறை இவர்களுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட் என்பது, ஆதரித்து நிற்பவர்களை எப்படி வீட்டுக்கு அனுப்பி வைத்து, ஆதரவை எப்படி சிதைக்க வைப்பது என்பதுவே” என கூறியிருக்கிறார்.

அருள்குமார் சோமசுந்தரம் என்பவர் தனது பதிவில், “சாதிய தமிழ் தேசியச் சிந்தனையின் உச்சகட்ட நகைச்சுவை!

இந்த ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் சாதிய சிந்தனைகளுக்கான வடிகாலாகவே சீமானை பயன்படுத்துகிறார்கள்.

இப்படியான சாதிவெறி பிடித்த மனித பிண்டங்களை களையெடுக்காத வரை சீமானுக்கு அரசியலில் அடுத்த கட்டம் என்பது வெற்றுக் கனவாகவே முடியும்.

தமிழ் மகன் விஜய் சேதுபதியை தெலுங்கு நாயக்கராக சித்தரித்து தன் சாதிவெறியை தணிக்கும் இந்த பதிவிற்கு 20க்கும் மேற்பட்ட, சுயசிந்தனையை இழந்த ரசிகசீமான்கள் ஆதரவுவேறு தெரிவித்துள்ளார்கள்” என்று கூறியிருக்கிறார்.

சாதி துவேஷம் செய்து தமிழ்தேச ஒற்றுமையை சீரழிக்க முயலும் இத்தகைய தொண்டர்களை சீமான் ஆதரிப்பாரா? அல்லது களை எடுப்பாரா? அவரது எதிர்வினை என்ன?

தெரிந்துகொள்ள காத்திருக்கிறார்கள் தமிழ்தேச மக்கள்!

@ @ @

Read previous post:
0a1f
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் மடோனா: ஜூலையில் படப்பிடிப்பு!

‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த மடோனா செபாஸ்டியன், ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு

Close