விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் மடோனா: ஜூலையில் படப்பிடிப்பு!

‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த மடோனா செபாஸ்டியன், ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.

’அனேகன்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமான புதிய படம் உருவாகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், ‘ப்ரேமம்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

நிர்வாக தயாரிப்பு எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் .

இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்,  ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

ஜூலை மாதம் துவங்கவிருக்கும் இத்திரைப்படத்திற்க்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read previous post:
0a1d
இளையராஜா பயங்கரவாதியா? தேங்காய் துணுக்கு வெடிகுண்டா?

கோவில் பிரசாதத்துடன் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட

Close