ஜெ.வை தந்திரமாக ஏமாற்ற சசிகலா எழுதிய ‘மன்னிப்பு’ கடிதம்: ஓ.பி.எஸ். வெளியிட்டார்!

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று இரவு மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியான கலகமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்தார் முதல்வர் ஓ.பி.எஸ். அப்போது, 2011ஆம் ஆண்டு தனக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டி தனது வீட்டிலிருந்து வெளியேற்றிய ஜெயலலிதாவை ஏமாற்றி மீண்டும் அவரது வீட்டுக்குள் நுழைவதற்காக சசிகலா தந்திரமாக எழுதிய மன்னிப்புக் கடிதத்தின் நகலை ஓ.பி.எஸ். வெளியிட்டார்.

அந்த கடிதத்தில், “அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ, எனக்குத் துளியும் ஆசையில்லை. பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்” என சசிகலா எழுதியிருக்கிறார்.

அப்படி எழுதிய சசிகலா தான் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க.வின் உயரிய பதவியாகிய பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றியதோடு, தற்போது தமிழக முதல்வர் ஆவதற்காகவும் மிக கேவலமாக காய் நகர்த்தி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய தந்திர மன்னிப்பு கடிதம்:

0a1a

0a1b