ரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி!

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும்.

தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு, ‘கபாலி’க்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மும்பை நிழலுகத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றான ‘விசாரணை’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.