“சமஸ்கிருதம் நாங்களும் கத்துக்கறோம்! பட் ஒன் கண்டிஷன்…”

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்… கத்துக்கறோம்…!

பட் ஒன் கண்டிஷன்…

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா…. கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் ஒரு சர்டிஃபிகேட் குடுங்க. அந்த சான்றிதழ் வச்சிருக்குற அனைவரையும் பதிவு மூப்பு அடிப்படையிலோ, அல்லது நுழைவுத் தேர்வு வைத்தோ…. தமிழக கோவில்கள் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்கணும்…! ஓ.கேவா?!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா…

SC, MBC, BC, OC… இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் அர்ச்சகர் வேலை கொடுக்கணும்.

இதுல இன்னோரு முக்கிய விஷயம் என்னன்னா…

எண்ட்ரன்ஸ்ல அதிக மார்க் வாங்குறவனுக்கு…,  அதிக வருமானம் உள்ள பெரிய பெரிய கோவில்ல அர்ச்சகர் வேலை கொடுக்கணும்…!!

ஓ.கேவா???!!!

வாங்கடியோவ்…. எங்காளுங்க பத்து லட்சம் பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு இருக்கும்போது… நீங்க சொல்ற சமஸ்கிருதம் என்ன…, ஜப்பான் மொழிய கூட கத்துக்க நாங்க தயாரா இருக்கோம்…!!

டீலா? நோ டீலா?!

– சௌமியன் வைத்தியநாதன்

                                         # # #

Vimal Murugesan: இந்த டீலுக்கே வரமாட்டாங்க!

V Jeyaganapathi: வாங்கடியோவ்.. டீலா, நோ டீலா?? அப்பறம், இத நாங்க நம்புறதுக்கு முதலில் கலைஞர் அரசு கொண்டு வந்த ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ சட்டத்தின் அடிப்படையில் பயிற்சி முடித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக தமிழகத்தின் பிரதான பழமையான அரசு நிர்வகிக்கும் கோவில்களில் தலைமை குருக்கள் பதவி வழங்க வேண்டும். ஏன்னா, உங்க மூஞ்சி (லேடி/மோடி/கேடி) எல்லாம் பார்த்தா நம்பிக்கையே வரமாட்டேங்கிது.

Vadivelu: சபாஷ்! சரியான போட்டி!! வாய்யா நரகாசுர மோடி!!! சவாலுக்கு தயாரா???

 அரவிந்த் திருவாரூர்: மயக்கமா வருது என்று மோடி ஓட போகிறார்!

Balaji Saivadurai: “ஏண்ணா, சமஸ்கிருதம் எங்கே இருக்கு?” ”அது தூத்துகுடி பக்கம் ராமநாதபுரம் பககம் இருக்கு! அது நமக்கு எதுக்கு ஓய்!”

 

Read previous post:
0
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை இயக்கிய திருலோகசந்தர் மரணம்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86 எம்.ஜி.ஆர். நடித்த 'அன்பே வா,' சிவாஜிகணேசன்

Close