ரஜினிகாந்த் அப்போலோ விசிட்: ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய நடிகர் ரஜினிகாந்த், தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷூடன் இன்று மாலை 6.15 மணிக்கு அப்போலோ மருத்துமனைக்கு வந்தார்.

அங்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களிடமும், உடன் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்து வரும் நிலையில், இன்று ரஜினிகாந்த் சென்று கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1
ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை?

ஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில்

Close