வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டில் ‘அதிரன்’ படப்பிடிப்பு! 

பி மூவிஸ் மற்றும்  ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன்  என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அதிரன்’. இதில் நாயகனாக சுரேஷ்குமார், நாயகியாக சஞ்சனா  அறிமுகமாகி உள்ளனர். இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான், தங்கமுத்து, ஸ்ரீராம், அச்சு, பாத்திமா, நாகராஜ், சானு ஆன்டனி, பர்தீஷ், கார்த்திக், இளசு, ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜே.வி.மோகன் இயக்கியுள்ளார். இசை – ரகு, ஜெய். ஒளிப்பதிவு – மகேஷ்,. எடிட்டிங் – இத்ரீஸ். கலை – கென்னடி.

படம் பற்றி இயக்குனர் ஜே.வி.மோகன் கூறுகையில், “கல்லூரியில்  படிக்கும் நாயகன் சூர்யா, தனது உயிர்நண்பன் ஸ்ரீயின் குடும்பம் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அந்த கடனை தான் அடைப்பதாக பொறுப்பேற்கிறான். ஆனால் சரியான நேரத்தில் கடனை அடைக்க முடியாததால் நண்பன் ஸ்ரீ கடத்தப்படுகிறான். நண்பனை காப்பாற்ற சூர்யா புறப்படும்போது, நாலு பேர் கொண்ட திருட்டு கும்பல் ஒன்று சூர்யாவிற்கு உதவ முன்வருகிறது. ஸ்ரீ எப்படி காப்பாற்றப்பட்டார்? திருட்டு கும்பல் அவர்களுக்கு ஏன் உதவியது? என்பதெற்கெல்லாம் பதில்தான் மீதிக்கதை

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நடைபெற்றது. கர்நாடகாவிலுள்ள சாலவாடி ஏரியாவில் தோட்ட காஜனூறில் உள்ள பன்ணை வீட்டில்  கன்னட நடிகர் ராஜ்குமார் முன்பு இருந்தபோதுதான் அவர் வீரப்பனால் கடத்தப்பட்டார். அந்த பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இந்த ‘அதிரன்” என்கிறார் இயக்குனர்.

Read previous post:
0a1
ரஜினிகாந்த் அப்போலோ விசிட்: ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய நடிகர் ரஜினிகாந்த்,

Close