ரஜினி பற்றி கமெண்ட்: இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடித்துவரும் எமி ஜாக்சன் அவரோடு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிந்தார்.

0a1a

அப்புகைப்படத்தை வைத்துக்கொண்டு முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 5 கமெண்ட்டுகள் பதிவிட்டிருக்கிறார். அவை:

11.52: அழகாக இருந்தால்தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற கருத்தை தகர்த்து விட்டார் இந்த ஆள்.

12.03: .அவரை பார்க்க சகிக்காது. சிக்ஸ் பேக் கிடையாது. குள்ளம். உடல் அமைப்பே சரியில்லை. டான்ஸ் ஆட தெரியாது.

12.06: இது மாதிரி ஒரு ஆள் சூப்பர் ஸ்டார் ஆவது உலகத்தில் வேறு எங்கேயும் நடக்காது. இவரை இப்படி ஆக்க கடவுளுக்கு இவர் என்ன கொடுத்தார் என்று தெரியவில்லை.

12.11: சினிமாவில் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு உதாரணம் ரஜினி.

12.20: ரஜினி என்ற ஆச்சரியத்துக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றால் தலைசிறந்த உளவியல் நிபுணர்களும் தலைசுற்றி விழுவார்கள்.

ராம்கோபால் வர்மாவின் மேற்கண்ட கமெண்ட்டுகளைத் தொடர்ந்து கே.ஆர்.கே என்ற விமர்சகரும் “பொதுமக்கள் அடிமுட்டாள்கள். அதனால்தான் ரஜினிகாந்த் என்ற நடிக்க தெரியாத, நடனமாடத் தெரியாத, சரியான உயரமோ, ஆளுமையோ இல்லாத ஒருவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ராம்கோபால் வர்மா மற்றும் கே.ஆர்.கே ஆகிய இருவரின் ரஜினி பற்றிய கருத்துக்களுக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.