முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 10ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

காவல்துறை அதிகாரியாக ரஜினியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், காமெடியனாக யோகிபாபுவும் நடிக்கும் இப்பட்த்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

Read previous post:
0a1a
8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: போராடிய மக்களுக்கு வெற்றி!

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து

Close