கேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்

பெருமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு காரணமாக கேரள மாநிலம் வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை, வெள்ளத்தால் மாநிலத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தப் பாதிப்பில் இருந்து மீள, பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த கமல்ஹாசன்,  ரஜினிகாந்த், ரோகிணி, சூர்யா, கார்த்தி, நயன்தாரா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, பிரபு, விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீபிரியா, ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, மம்மூட்டி, துல்கர் சல்மான் மற்றும் பலர் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கேரளாவில் அவருக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் இருப்பதால், அந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கு தலா ரூ.3லட்சம் வீதம் விஜய் இந்த நிதியை அனுப்பியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேரள வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு, அங்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல், ரசிகர்களின் வங்கிக் கணக்குக்கு விஜய் பணம் அனுப்பியுள்ளதால் அவருக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1a
மக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் அழித்து ரூ.10,000 கோடி செலவில் போடப்படவிருக்கும் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் தற்காலிகத் தடை விதித்து

Close