அநாகரிக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் போர்க்கொடி!

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கை:-

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த ரஜினிகாந்த், ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார்.

அவருடைய நடவடிக்கைக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி.

இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கூறியுள்ளது.