திருடர்களிடமிருந்து ‘கபாலி’யை பாதுகாக்க புதிய திட்டம் தயார்!

‘கபாலி’க்கு ஒரு கோடி பதிவிறக்கம் (முழுப்படமும் திருட்டு முறையில்) நடக்கும் என ஒரு கணக்கு சொல்கிறது.

அதாவது, சராசரியாக சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் இந்திய தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்

20 கோடியோ, 2 கோடியோ, யார் வீட்டு படைப்பை யாரோ திருட, யாரோ பதிவேற்றம் செய்ய, யாருக்கோ லாபம் வருமாம்… இதை இந்த மத்திய அரசாங்கம் தன் சுய லாபத்திற்காக, சுய வியாபார விருத்திக்காக இந்த திருட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதாம்…

கேட்க ஆளில்லையா நியாயன்மாரே?

இதோ, இந்த முறை யுத்தம் உண்டு…

திரைப்படத் தயாரிப்பாளர்கள் பக்கம் நியாயம் உண்டு…

‘கபாலி’ ஒரு தொடக்கம் மட்டுமே. இனியும் எங்கள் தயாரிப்பாளர்கள் படைப்பால் சம்பாதித்துவிட்டு… இந்த் திருட்டை தடுக்க ஒரு தடுப்பு சுவர் எழுப்பப்படவில்லை எனில், இந்திய அரசாங்கம்… இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும், சம்மந்தப்பட்ட அமைச்சகம் மீதும்… மற்றும் சுமார் பல நூறு பேர் மீதும் நஷ்டஈட்டுத் தொகை கேட்கப்படும்… கொடுக்கவில்லை எனில் போராட்டமும் உண்னாவிரதமும் தொடரும் ..

“நெருப்புடா… நெருங்கினால் பொசுக்கும்டா…” என உரக்கச் சொல்ல ஒரு தருணம் நெருங்குகிறது ..

நாளை சட்டப்படி ஒரு திட்டம்… இல்லை எனில், தர்மப்படி ஒரு முடிவு… ஒரு தொடக்கம் தயாராக வடிவமைகக்க்ப்பட்டுள்ளது பார்க்கலாம்…

– வெங்கட் சுபா

திரை பிரமுகர்