ஒரு புதிர் போட்டி: மோகன்லாலுக்கு ரஜினிகாந்த் என்ன உறவு?

இந்த பதிவ படிச்சு தலை சுத்துச்சுனா, நா பொறுப்பல்ல..

உறவுங்கறது ஒரு சங்கிலி… அது போய்ட்டே இருக்கும்…

இப்போ மலையாள ஆக்டர் மோகன்லால் இருக்கார். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் ஒய்.ஜி.மகேந்திரனோட அம்மா. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினிகாந்த் தம்பி ரவி. இவர் மகன் அனிருத். ஒய்.ஜி. மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் பாட்டி நடிகை சாவித்திரி. தாத்தா நடிகர் ஜெமினி கணேசன்…

இப்போ மோகன்லாலுக்கு ரஜினிகாந்த் என்ன உறவு?…

பாலாஜிக்கு ஜெமினி கணேசன் என்ன முறை…?

யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க…

எனக்கு சத்தியமா தெர்ல…

– அறிவழகன் சோழன்

திரைப்பட இயக்குனர்