“துரோகத்தின் புதிய முகங்களை அடையாளம் காண காத்திருக்கிறோம்; ‘கெட்ட சிவா’க்களே… வருக!”

ராகவா லாரன்ஸ், மாணவர்கள் பெயரால்  ஒரு கட்சி ஆரம்பிக்கத் திட்டமிடுவதாக செய்திகள் அடிபடுகின்றன.

கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கும் திட்டமெதுவும் அவரிடம் இருப்பதாக நான் கருதவில்லை. வரப் போவதாக நம்பப்படும் ஒரு புதிய மாற்றத்தை தடுப்பதற்கான கருவியாக அவர் பயன்படுத்தப்படலாம்.

மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணந்த எழுச்சிப் போராட்டம் அரசியல் பெருந்தலைவர்களின் தூக்கத்தைப் பறித்திருக்கிறது.

எண்பதுகளில் அசாம் கண பரிஷத் என்ற பெயரில் அசாமில் மாணவர்கள் தேர்தலில் வென்றார்கள். பிரபுல்ல குமார் மகந்தா தலைமையில் அவர்கள் ஆட்சியைப் பிடித்தது போல், இங்கும் நடக்கலாம் என்று நம்புவதற்கான சூழல் உள்ளது..

அது செயல் வடிவம் பெறுவதற்கு முன், இதனை அரசியல் விளையாட்டாக்குவதற்கு  தன் கைப்புள்ளைகளைக் கொண்டு அதிகார வர்க்கம் முயலும்.

வடகிழக்கு இந்தியாவில் மக்கள் செல்வாக்குள்ள, மக்கள் புரட்சிக் குழுக்கள் தீவிரமாகச் செயல்படும் இடங்களில், அரசு ஆதரவு போலிப் புரட்சிக் குழுக்கள் உருவாக்கப்படுவது வழக்கம் – ஈழத்தில் டக்ளஸ் தேவானாந்தாக்களும், கருணாக்களும் உருவாக்கப்பட்டது போல.

இங்கு உண்மையான உணர்வுள்ள மாணவர் – இளைஞர் இயக்கம் உருவாவதற்கு முன், அதனை பலவீனப்படுத்த இது போன்ற பல கைக்கூலி இயக்கங்கள உருவாக்கப்படலாம்.

கட்சிகளை உடைப்பதும், உருவாக்குவதும் உளவுத்துறைக்கு கடினமான வேலையொன்றுமில்லை.

இதில் யாரெல்லாம், எந்த விதத்திலெல்லாம் களமிறக்கப்படுவார்கள் என்பது அதிர்ச்சியான சுவாரசியமாக இருக்கும்.

துரோகத்தின் புதிய முகங்களை அடையாளம் காணக் காத்திருக்கிறோம். ‘கெட்ட சிவா’க்களே… வருக!

KAVITHA BHARATHI

 

Read previous post:
0
“தேவை வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்”: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

“தேவை வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆக்கப் பணிகளில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். சல்லிக்கட்டு போராட்டத்தில்

Close