‘எங் மங் சங்’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறார் பிரபு தேவா!

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். ‘தேவி’ வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்ஜே. பாலாஜி, பாகுபலி பிரபாகர் (கலக்கேயா), கும்கி அஸ்வின், நாகேந்திர பிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன்.

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக பிரபலம் அடைந்தவர். அதற்குப் பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறார். டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டண்ட் மாஸ்டராக, அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக ‘எங் மங் சங்’ படத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான ‘எங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு   –   ஆர்.பி.குருதேவ்

இசை – அம்ரீஷ்

பாடல்கள் – பிரபுதேவா, மு.ரவிகுமார்

எடிட்டிங் – நிரஞ்சன், பாசில்

கலை – ராஜன்.டி

தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி

ஊடகத்தொடர்பு – மௌனம்ரவி