விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் காதல் படம் ‘96’

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’, விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ போன்ற  படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்குபவர் பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகிறது ‘96’.  இந்த படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷா இருவரது சிறுவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு  – சண்முகசுந்தரம்

இசை – கோவிந்த் மேனன்

எடிட்டிங் – கோவிந்தராஜ்

கலை – வினோத் ராஜ்குமார்

பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி

Read previous post:
0a
நாயகி அமேரா தஸ்தூர் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்! 

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமேரா தஸ்தூர்  நடிக்கிறார். மற்றும் ரேணுகா,

Close