நாயகி அமேரா தஸ்தூர் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்! 

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாயகியாக அமேரா தஸ்தூர்  நடிக்கிறார். மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றி படத்தின் இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இதன் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடி பாடும் பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழி பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அவர் ஜாலியாக ஆடிப் பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கினர்.

ஒளிப்பதிவு – கோபிநாத்

இசை    –    ஜிப்ரான்

கதை  – ஞானகிரி

கலை –  வனராஜா

ஸ்டன்ட்  – சில்வா

எடிட்டிங் – ராமாராவ்

நடனம்  – அசோக்ராஜா

தயாரிப்பு நிர்வாகம்  –  மகேஷ்

தயாரிப்பு மேற்பார்வை  – பாலகோபி

மக்கள் தொடர்பு  –  மௌனம்ரவி

 

Read previous post:
0
“ரஞ்சித் இயக்கும் ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல”: தனுஷ் விளக்கம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதை அல்ல என்று இப்படத்தை தயாரிக்கும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Close