“பிள்ளையார் நம் காலத்தின் வன்முறை கருவியாக மாற்றம் அடைந்துவிட்டார்!”

நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம்,

அவர்களை தூரத்தில் இருந்தே கவனித்துக்கொண்டே தான் வந்தோம். சாலையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான் சலம்பிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் வாகனத்தை சாலையை கடந்து காந்தி மியுசியம் பாதைக்கு செல்ல அவர்கள் வழிவிடவில்லை. அப்படி நாங்கள் கிடைத்த இடைவெளியில் செல்ல ஆயத்தமானபோது மொத்த வன்முறையாளர்களும் கூடி வாகனத்தை தாக்கினார்கள். நண்பர் இளங்கோ கல்லானையின் வண்டியில் பின்பகுதி தாக்கப்பட்டடு சேதமானது.

அவர்கள் பயன்படுத்திய மொழிக்கும் பக்திக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு என்று இதுவரை யோசித்தும் புரியவில்லை. அருகில் இருந்த காவல்துறையினர் கையாலாகாதவர்களாக வன்முறையாளர்களை தடுக்கும் திராணியற்றிருந்தார்கள்.

வன்முறையாளர்களின் வாகனத்தில் இருந்த பிள்ளையார் ”இவனுங்க கிட்ட நல்லா மாட்டிக்கிட்டோம்” என்கிற தொனியில் முழித்துக்கொண்டிருந்தார்.

பிள்ளையார் நம் காலத்தின் வன்முறை கருவியாக முழுமையாக மாற்றமடைந்துவிட்டார்.

 முத்துகிருஷ்ணன்

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்