ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொண்டு நிறுவனத்தில் ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித்!

பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிவரும் பிரபல தொண்டு நிறுவனம் ‘எவிடன்ஸ்’. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இதன் அலுவலகத்துக்கு ‘கபாலி’ திரைப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இன்று சென்றுள்ளார்.

இது குறித்து ‘எவிடன்ஸ்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் எவிடன்ஸ் கதிர் எழுதியிருப்பது:-

இன்று காலை நான் மதிக்கும் எழுத்தாளர் எஸ்.வீ.ராஜதுரை அவர்களும், அன்பு இளவல் இயக்குனர் ரஞ்சித் அவர்களும் எவிடென்ஸ் வந்து இருந்தனர். அரசியல், சமூகம், மனித உரிமைகள் என்று உரையாடல் நீண்டுகொண்டே சென்றது.

“உங்களுடைய செயல்பாடுகள் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது கதிர்” என்று பூரிப்புடன் எஸ்.வீ.ஆர். சொன்னார். அவருக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்தது. எல்லோரிடமும், “நான் கதிர் உடன் இருக்கிறேன். மிக பெரிய பணிகளை செய்துவருபவர் கதிர்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பு குறித்து கேட்டார்கள். சொன்னேன்.

விடைபெறும்போது, “அண்ணா.. பார்த்து இருங்கள். பாதுகாப்புடன் இருங்கள்” என்று ரஞ்சித் சொன்னார். இது போன்றவர்களின் வார்த்தையும், ஆதரவும்தான் நம்மை தொடர்ந்து இயங்க வைக்கிறது.

0a3u

Read previous post:
0a2c
அச்சம் என்பது மடமையடா: “ராசாளி” பாடல் பற்றி தாமரை!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில், கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது

Close