“திலீபன் மகேந்திரன் தான் இப்ப எங்க ராம்குமார்”: ராம்குமார் குடும்பம் உருக்கம்!

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார், சென்னை புழல் சிறையில் செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். நீண்ட சட்ட போராட்டத்துக்குப்பின் அக்டோபர் 1ஆம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட அவருடைய உடல், சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் நேற்று (2ஆம் தேதி) அடக்கம் செய்யப்பட்டது.

ராம்குமார் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டதிலிருந்து, “அவருக்கும் சுவாதி கொலைக்கும் தொடர்பு இல்லை” என்று தொடர்ந்து வாதிட்டதோடு, “அது ஆணவ கொலையாக இருக்கலாம்” என்பதற்கான நியாயமான சந்தேகங்களை, கேள்விகளை, ஆதாரங்களுடன் தனது முகநூல் பக்கத்தில் எழுப்பி வந்தவர், சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரை ஜாமீனில் வெளியே கொண்டுவர அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் ஆகியோரோடு சேர்ந்து கடுமையாக உழைத்தவர். ராம்குமாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட திலீபன் மகேந்திரனின் உருக்கமான பதிவு இதோ:-

0a

தோழர் ராம்குமார்…

இதுவரைக்கும் நான் கையிலெடுத்த எந்த விஷ்யத்துலயும் தோத்தது இல்ல.. இந்த ராம்குமார் விஷயத்திலையும் அப்படித் தான் வெற்றிக்கு ரொம்ப பக்கம் போனோம்.. 90 நாளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால, ராம்குமாரை ஜாமீன்ல வெளியே விட்டுதான் ஆகணும். வேற வழி இல்ல. அதுக்குள்ள கொன்னுட்டானுங்க..

அவனை உலகமே கொலையாளின்னு சொல்லும்போது, அவனை கைது பண்ணின முதல் நாள்ல இருந்து, நிரபராதினு நிரூபிச்சி எப்டியாவது வெளியே கூப்டு வந்து, அவன்கூட கெத்தா நின்னு செல்பி போடணும்னு ரொம்ப ஆசப்பட்டேன். ஜெயில்லையே கொன்னுட்டானுங்க..

ராம்குமார் கடைசியா கோர்ட்டுக்கு வரும்போது நாங்க அவனை உயிரோட பாத்தோம். நானும் முரளியும், “ராம்குமார், ராம்குமாரு”ன்னு கத்துனோம். நூற்றுக்கணக்கான போலீசையும், மீடியாவையும் தாண்டி எங்க குரல் அவன் காதுல கேக்கல..

கடைசியில, ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கிட்ட சவ ஊர்வலத்துல, அவன் சவப்பெட்டிய என் தோள்ல சுமக்கத் தான் முடிஞ்சது…

போஸ்ட்மார்டத்துல இருந்து, அவனை சவக்குழியில பொதைக்குற வரை அவன்கூடதான் இருந்தேன்.

அவுங்கப்பா அவ்ளோ துக்கத்திலையும் அவுங்க சொந்தங்காரங்கள்ட்ட என்னை அறிமுகப்படுத்தும்போது, “இவன்தான் இப்ப எங்க ‘ராம்குமார்’. ‘என் மகன்’. எங்களுக்காக அவ்ளோ மெனக்கெட்டான்”னு சொன்னாரு. நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.

என் அப்பாவுக்கே நான் இதுவரை ஒண்ணும் செஞ்சது இல்ல.

ராம்குமாரோட ரெண்டு தங்கச்சியும், “அண்ணன், அண்ணன்”னு சொல்றாங்க.

அவுங்க அம்மாவுக்கு என்னால ஆறுதல் சொல்ல முடியல. எந்நேரமும் அழுதுட்டே இருக்காங்க. என்னால பேச முடியல..

என்னை ராம்குமாரோட சாவு சடங்கு வரைக்கும் இங்கேயே தங்க வச்சிட்டாங்க. ராம்குமார் தூங்குன அதே இடம், ராம்குமாரோட சட்டை, கைலி… அதுதான் இப்ப எனக்கு…

என்னால முடிஞ்ச வரை முயற்சி பண்ணினேன். தோழர் ராம்ராஜுக்கு வழக்குல உதவி செஞ்சேன். நான் ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி வரைக்கும் (Aug 25) தோழர் தமிழச்சி மூலமா சேதிய பரப்புனேன். மூன்று முறை தோழர் கு.ரா-வை கோயம்புத்தூர்ல பாத்து விஷ்யத்தை சொன்னேன்..

தனியா செயல்பட்டா உதவாதுன்னு தான் இப்டி செஞ்சேன்.. அதுக்குள்ள என்னை கைது செஞ்சி, மொபைல புடுங்கி, 13 நாள் ஜெயில்ல அடைச்சி, ராம்குமார் பத்தி விஷ்யத்தை சேகரிக்கிறதை மந்தம் பண்ணிட்ட்டானுங்க..

3 நாளைக்குப் பிறகு அவனுக்கு காரியம் வச்சிருக்காங்க. முடிஞ்சவங்க உதவுங்க… அவுங்க ஏற்கனவே தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்துட்டாங்க..

ராம்குமார் அம்மாவோட அக்கவுண்ட்:-

Name:p.pushpam
W/o Parama sivan. R
bank name:Canara bank.
a/c no:1116108041549 branch:Shengottai ifsc:cnrb0001116

என் நம்பர் – 9003406819