ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ சென்ற மு.க.ஸ்டாலின்!

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்.

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் சிகிசிச்சை பெற்று வருகிறார். அவரை முக்கிய கட்சித் தலைவர்கள் சந்திக்க சென்று வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று காலை சந்தித்து விட்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் சற்று முன்பு அப்பலோ மருத்துமனைக்கு சென்றார். அவருடன் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும் சென்றுள்ளார்.

Read previous post:
0a
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல்

Close