ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு நுரையீரல் மற்றும் சுவாச உதவி சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read previous post:
0a
REMO – Tamil Review

திரையுலகிலும், ரசிகர்கள் மனங்களிலும் சிவகார்த்திகேயன் மேலும் வலுவாக காலூன்றுவதற்காக மிகவும் பார்த்துப் பார்த்து கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ரெமோ’. உதாரணமாக, டைட்டில் போடும்போது, முதலில் S K என்ற

Close