“ரஜினியின் ‘கபாலி’ 152 நிமிட படம்; ‘யு’ சான்றிதழ்; மகிழ்ச்சி!” – கலைப்புலி எஸ்.தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், ‘கபாலி’ திரைக்கு வரும் தேதி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துரையினர் மத்தியிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால், ‘கபாலி’ படக்குழுனரோ, படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்தபின் தான் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறினர்.

இந்நிலையில், இன்று கபாலி படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கினர். இதனை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில், ”152 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி” என்று ட்வீட் செய்துள்ளார்.

தணிக்கைப் பணி முடிவடைந்துவிட்டதால், கபாலி எப்போது வெளியாகும் என்ற விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
0a1c
எச்சரிக்கை: இனி வரும் நாட்கள் மிகக் கொடியவை!

இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான்

Close