பிரபல நாவல் ‘மிளிர் கல்’ திரைப்படம் ஆகிறது: மீரா கதிரவன் இயக்குகிறார்!

‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மீரா கதிரவன். அவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் இரண்டாவது படமான ‘விழித்திரு’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து இரா.முருகவேள் எழுதிய ‘மிளிர் கல்’ என்ற பிரபல தமிழ் நாவலை திரைப்படமாக இயக்குகிறார் மீரா கதிரவன். இது குறித்து அவர் கூறியிருப்பது:

“நண்பர்களே,

என்னுடைய இரண்டாவது படமான ‘விழித்திரு’ விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து, அடுத்த படத்திற்கான முதல்கட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன்.

தமிழில் சிறந்த நாவல்கள் அரிதாகவே திரைப்படமாகின்ற சூழலில், இரண்டு வருடங்களுக்குமுன் தோழர் இரா.முருகவேள் எழுதி, எல்லோரது பாராட்டுக்களைப் பெற்ற ‘மிளிர் கல்’ நாவலை மையமாக வைத்து அடுத்தப் படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.

’மிளிர் கல்’ நாவலை படமாக்கப் பலரும் ஆர்வம் கொண்டிருந்தபோதும் என் மீது நம்பிக்கை கொண்டு தோழர் இரா.முருகவேள் அதன் முறைப்படியான உரிமையை எனக்கு அளித்திருக்கிறார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.!

பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப்க்கலைஞர்களின் பங்களிப்பையும் உழைப்பையும் பெரிதும் கோருகிற படமாக இது இருக்கும்.

 பழந்தமிழ் சமூகத்தின் உன்னதங்களின் மீதும் சமகால உலகமயமாக்கலின் சுரண்டலின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்ற ஒரு களம். கண்ணகி நடந்த பாதையில் பயணிக்கும் கதாநாயகன்-கதாநாயகி, கார்ப்பரேட் மாஃபியாக்கள், கரைவேட்டி கேங்ஸ்டர்ஸ் என விறுவிறுப்பான படமாகவும், ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தை தரக்கூடிய படமாகவும் இருக்கும் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் அனைத்து விவரங்களும் ஊடக நண்பர்களைச் சந்தித்து அவர்கள் மூலமாக விரைவில் முறையாக அறிவிக்கப்படும். எப்போதும் போலவே உங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் வேண்டி நிற்கிறேன். நன்றி!”

0a1c

Read previous post:
0a1j
“ரஜினியின் ‘கபாலி’ 152 நிமிட படம்; ‘யு’ சான்றிதழ்; மகிழ்ச்சி!” – கலைப்புலி எஸ்.தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு

Close