சிவாஜி, கமல், சத்யராஜ், பிரபு, ரேவதி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மரணம்

சிவாஜி கணேசன் – சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’, சிவாஜி கணேசன் – அம்பிகா நடித்த ‘வாழ்க்கை’, கமல்ஹாசன் – நிரோஷா நடித்த ‘சூரசம்ஹாரம்’, பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி அறிமுகமான ‘மண்வாசனை’, பிரபு – நக்மா நடித்த ‘பெரிய தம்பி’ உள்ளிட்ட 14 படங்களை, தனது தம்பியும் இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுடன் சேர்ந்து தயாரித்தவர் சித்ரா ராமு.

0a

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த சித்ரா ராமு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

அவரது உடல் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் இறுதி சடங்கு நடக்கிறது.

சித்ரா ராமுக்கு தங்கம் என்ற மனைவியும், விஜய் சரவணன், விஜய் கார்த்திக் என்ற 2 மகன்களும், குகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

Read previous post:
k2
Kathi Sandai Trailer Launch Photos Gallery

Close