ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருப்பதால் இந்நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சனிக்கிழமை (ஜூன் 11) இரவு பாடல்கள் வெளியிடப்பட்டன.

0a1c

சென்னையில் எளிமையாக நடைபெற்ற ‘கபாலி’ பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பா.ரஞ்சித்,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரஜினியின்  இளைய மகள் சௌந்தர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘கபாலி’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டை ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 1008 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையிலும் ‘கபாலி’ படத்தின் டீசர் திரையிடப்பட்டது.

இக்கொண்டாட்டத்தில் அனைத்து ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Read previous post:
0a1d
மீன் முக்கிய பாத்திரத்தில் வலம் வரும் படம் ‘கட்டப்பாவ காணோம்’!

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய படத்துக்கு 'கட்டப்பாவ காணோம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். 'போக்கிரி ராஜா' படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நாயகனாக நடிக்கும் புதிய

Close