ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஆனால், மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுதான், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய நடவடிக்கை எடுத்தது.

இதில் சந்தேகம் இருந்தால், கீழே உள்ள மன்மோகன்சிங் கடிதத்தைப் பாருங்கள். பிரதமர் பதவியை இழந்த பிறகு (2015ல்) மன்மோகன் சிங் எழுதியுள்ள இந்த கடிதத்தில் “ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க்வே கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். எனில், அவர் பிரதமராக இருந்தபோது, எத்தனை கீழ்தரமாக தமிழர் விரோதப் போக்கை கடைபிடித்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்…! 0a1e