அதிமுக ஆட்சியா? திமுக ஆட்சியா? இழுபறியா? – லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு போலவே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவகாரத்திலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் ஒவ்வொரு விதமான முடிவை வெளியிட்டுள்ளன.

‘அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்’ என்று டைம்ஸ் நவ் டிவியும், ‘திமுக ஆட்சியைப் பிடிக்கும்’ என்று நியூஸ் எக்ஸ், என்டிடிவி, இந்தியா டுடே, ஏபிபி ஆகியவையும், ‘இழுபறி நிலை ஏற்படும்’ என்று நியூஸ் நேஷன், போல் ஆப் போல்ஸ் ஆகியவையும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளன. அதன் விவரம்:

டைம்ஸ் நவ் டி.வி.

அ.தி.மு.க. -139

தி.மு.க. -78

மற்றவை -17

நியூஸ் எக்ஸ்

தி.மு.க. -129-151

அ.தி.மு.க. -81-89

மற்றவை -2-6

என்.டி.டி.வி.

தி.மு.க. -132

அ.தி.மு.க. -95

இந்தியா டுடே

தி.மு.க. -124-140

அதி.மு.க. -89-101

மற்றவை -4-11

ஏ.பி.பி.

தி.மு.க. -135

அ.தி.மு.க. -95

மற்றவை -7

நியூஸ் நேஷன்

தி.மு.க. -114-118

அ.தி.மு.க. -95-99

மற்றவை -27

போல் ஆப் போல்ஸ்

அ.தி.மு.க. -110

தி.மு.க. -109

பா.ஜனதா -0

மற்றவை -15

இவற்றில் எது சரி? வருகிற 19ஆம் தேதி தெரியும்!