எனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…?

சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசிய பேச்சு இதை மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது.

கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் கவுதமி மற்றும் மகள் அக்‌ஷராவுடன் வந்து வாக்கு பதிவு செய்தார். அதன்பின் அவரை சந்தித்த செய்தியாளர்கள், “ஆட்சிக்கு யார் வரணும்னு நினைக்கிறீங்க?” என கேட்டனர். அதற்கு கமல்ஹாசன், “நாம நினைக்கிறதெல்லாம் நடக்காது. நல்லவங்க வரணும்னு நினைக்கிறேன்…” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சொன்னதன் பொருள் என்ன என்று புரியாமல் முதலில் திகைத்த செய்தியாளர்கள், பின்னர் அவரது முதல் வாக்கியத்தை இரண்டாவது வாக்கியமாகவும், இரண்டாவது வாக்கியத்தை முதல் வாக்கியமாகவும் மாற்றிப்போட்டு சரியாக புரிந்துகொண்டார்கள். “நல்லவங்க வரணும்னு நினைக்கிறேன். நாம நினைக்கிறதெல்லாம் நடக்காது.”

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” என சில கருத்துக்கணிப்புகளும், “திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என்று வேறுசில கருத்துக்கணிப்புகளும் வெளியாகியுள்ள நிலையில் தான் கமல்ஹாசன் இப்படி கூறியுள்ளார்.

எனில், “நல்லவங்க வரணும்னு நினைக்கிறேன். நாம நினைக்கிறதெல்லாம் நடக்காது” என்று சொன்ன கமல்ஹாசன் யாருக்கு வாக்களித்திருப்பார்…?

மக்கள் நலக் கூட்டணி…?!?

Read previous post:
0a1x
சொல்லுங்க சூர்யா…! அவனெல்லாம் கேனயனா…?

ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், “நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும்

Close