ஓவியா பெயரை கெடுக்க பிக்பாஸ் வேண்டுமென்றே கொடுத்த ‘ரெட் கார்ப்பெட்’ டாஸ்க்!

பிக் பாஸ் – 28.07.2017

#

கமல்ஹாசன், விஜய் டிவி நிர்வாகம், ‘பிக் பாஸ்’ கிரியேட்டிவ் டீம் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் காயத்ரி குடும்பத்தினர் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக, காயத்ரியை காப்பாற்றும் முயற்சி இன்றும் தொடர்ந்தது.

காலையில் பாட்டு போட்டவுடன் எப்போதும் ஓவியா மட்டும் தான் உற்சாகமாக டான்ஸ் ஆடுவார். காயத்ரி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தபடி, யானை அசைவதைப் போல் இந்தப் பக்கமும் அந்த பக்கமும் அசைவார். டான்ஸ் அசைவு கொடுக்கிறாராம்!

ஓவியாவுக்கு போட்டியாக காயத்ரி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் பிக் பாஸ், “சினேகனுக்கு தினமும் டான்ஸ் சொல்லிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டு, அந்த சாக்கில் காயத்ரியை ஆட தூண்டினார். அந்த டான்ஸ் பயிற்சி எடுபடவே இல்லை.

இதனால், ஓவியாவுக்கு பக்கத்திலேயே நேற்று கணேஷ் வெங்கட்ராமுடனும், இன்று சக்தியுடனும் சேர்ந்து ஆடினார் காயத்ரி. சகிக்க முடியவில்லை. வழக்கம் போல் ஓவியாவின் டான்ஸ் தான் இன்றும் டாப்.

#

காயத்ரிக்கு பிக்பாஸ் ரகசிய இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து, அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் ரொம்ப சாதுவாக நடிக்க வைத்திருப்பது ஓவியாவுக்கு தெரிந்துவிட்டது போலும். இனியும் இந்த மோசடி நிகழ்ச்சியில் தொடருவது வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஓவியா, இந்த வீட்டை விட்டு வெளியேற தீர்மானித்துவிட்டார். எல்லோரும் வெறுத்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, ஓவியா தன் இயல்பு மீறி முரண்டு பிடித்தார். ஆரவை கூட எடுத்தெறிந்து பேசினார். “இனி சாந்தியும் இல்ல, சமாதானமும் இல்ல, அதிரடி தான்” என்று க்ளைமாக்ஸ் டேக்ஆஃப் ஆவேசம் காட்டினார்.

#

ஏற்கெனவே ஓவியாவுக்கும் ஜூலிக்கும் பிரச்சனை இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஓவியாவை வெறுப்பேற்ற வேண்டும், அவருக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ‘சகுனி’யான பிக்பாஸ், ஓவியாவுக்கு ஜூலி மூலம் ‘ரெட் கார்ப்பெட்’ டாஸ்க் கொடுத்தார்.

பிக்பாஸின் சகுனி வேலை நன்றாகவே வேலை செய்தது.

காயத்ரி காட்டில் செயற்கை மழை…

ஓவியா தான் பாவம்…!

S.SENTHIL

# # # # #

Vijay TV, if u strong, eliminate Oviya and do this programme. In reality, this show now survive only with Oviya in…

MICHAEL ARUN

# # # # #

ரெண்டு நாளா ஓவியா காட்ற attitude ஓவியா மாதிரியே இல்லை. ஜுலிகிட்ட நடந்துக்குற நிறைய சம்பவங்கள பாத்தா அப்டி தெரியுது.

இப்ப இந்த ‘கார்ப்பெட் மேட்டர்’ பயங்கரமா dignityஐ இடிக்கிற விஷயம் தான், இருந்தாலும் நடந்துக்கிட்டது சரியில்லை.

எல்லாத்துக்கும் மேல, ஓவியாகிட்ட ஹைலைட்டே அழாதது தான். இப்ப பிக்பாஸ் வீட்ல ஓவியா மட்டும் தான் அழுதுட்டு இருக்கு…

என்னங்கடா நடக்குது..? ஓவியா உடம்புக்குள்ள வேற ஆவி எதும் புகுந்துடுச்சா?

 N NAVEENKUMAR

 # # # # #

 ஏன் ஜூலி…

வையாபுரி, சினேகன், கணேஷ் எல்லாம் பெரிய ஆளுங்கன்னு தோணுன உனக்கு, ஏன் ஓவியா பெரிய ஆளுனு தோணாமல் போச்சு?

உன் மேல, காயத்ரி மேல எங்களுக்கு ‘சிம்பத்தி’ வரும்னு கனவுலகூட நினைக்காதீங்க!

மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு பிக்பாஸ் டீம் சொன்னாலும், கமல் சொன்னாலும் நம்பாதீங்க

ஒருவேளை நீங்க ஜெயிச்சா, அது நாங்க போட்ட ஓட்டு இல்ல; அது உங்க டீம் போட்ட கள்ள ஓட்டு.

#

“இனி சாந்தியும் இல்லை, சமாதானமும் இல்லை… அதிரடிதான்!” – ஓவியா.

தலைவி எவ்வழியோ… ஆர்மியும் அவ்வழியே…!

# # #

காயத்ரி இன்னிக்கு தான் உருப்படியா ஒண்ணு பண்ணுனா!

வேறென்ன…

ஜூலிய கீழே போட்டு, அவளும் சேர்ந்து விழுந்தது தான்!

காசி விஸ்வநாதன்

# # # # #

நீங்க ஓவியாவ வில்லியாக்குவீங்களோ… இல்ல, ஜூலிய நல்லவளாக்குவீங்களோ… காலைல பாட்டுப் போடும்போது இந்த காயத்ரியும் சேர்ந்து ஆடுறத மொதல்ல நிறுத்தி தொலைங்க…

ஓவியா ஆடுறத பாத்த கண்ணால இதையெல்லாம் பாத்து சகிக்க முடியல….

 MARAM R

# # # # #