“உங்க மனைவியே எரிச்சல் படுகிறார்… வெளில வாங்க செங்கோட்டையன்!”

இந்த செங்கோட்டையன் அண்ணனைப் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நேரடிப் பழக்கமில்லை. ஆனால் என்னுடைய தோழமைக் காதுகள் அவரோடு எந்நேரமும் இருந்தன. நல்ல மனிதர் அவர். சும்மா சொல்லக் கூடாது. அவர் அரசியல் வாழ்க்கை முழுவதும் ஏற்ற இறக்கங்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டும் கொஞ்சம் சுகமாக இருந்தார். அவரது அத்தனை இறக்கங்களுக்கும் காரணம் சசிகலா.

எம்.எல்.ஏ சீட்டைக் கூடப் போராடித்தான் வாங்குவார். எலெக்‌ஷன் நேரங்களில் மட்டும் காருக்கு முன்னால் ஓட வாய்ப்புத் தருவார்கள். அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட்.

இடையில் அவரோடு நிறையச் செத்துச் செத்து விளையாடினார்கள். அவமானத்தில் சில வருடங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டு பின்வாசல் வழியாகத்தான் வீட்டுக்குள்ளேயே நுழைவார். மாதக் கணக்கில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பார்.

அப்படிப்பட்டவர் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்க வேண்டாமா? மாறாக, தன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார். பெருந்தலைவராக இருந்திருக்க வேண்டியவர். இப்போது தவறிய தலைகளுள் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவரது வீட்டுக்கார அம்மணி நல்ல அக்கா. இடையில் வயது போன கோளாறு காரணமாக வேறு காரியங்கள் செய்ததாகச் செய்திகள் வந்தன. அதையெல்லாம் அந்தக்கா மன்னித்து ஏற்றுக் கொண்டது. இப்போது அந்தக்கா “இந்த மனுஷனுக்கு என்னாச்சு. கிறுக்குப் பிடிச்சிருச்சா. அந்தம்மாவுக்கு போய் கூவிக்கிட்டிருக்காரு” எனச் சொன்னதாகச் செய்தியில் வந்தது.

ஆக, தலைகளின் வீட்டுக்குள்ளேயே எதிர்ப்பு இருக்கிறது. இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமெனில் இவர்களுக்கு கட்டின மனைவிகளிடம்கூட மரியாதை இல்லை. வீட்டிலேயே பேர் எடுக்க முடியாதவர்கள் நாட்டில் எடுத்து என்ன பயன்?  இன்று ஓ.பி.எஸ் வீட்டிற்குப் போனபோது அவரோடிருந்த நண்பனைச் சந்தித்து துக்கம் பரிமாறிக் கொண்டோம்.

கொங்கு மண்டலத்தில் அவரும் ஒரு யானைதான். ஆனால் ஐம்பது பைசாவிற்காக கால் மடக்கிக் கையேந்துகிறார். வெளில வாங்கண்ணே! உங்க கொங்கு மண்டல மாப்பிள்ளை சொல்கிறேன். பெண் வீட்டார் தரப்பு கொஞ்சம் கெத்தாக இருந்தால்தான் பெண்களுக்குப் பெருமை. அது உங்கள் மனைவிக்குத் தெரியும். அதனால்தான் எரிச்சல் படுகிறார் போல!

SARAVANAN CHANDRAN