இந்த போலீஸ் ரவுடியை “புகழ” விரும்பு வோருக்கு: இவரது தொலைபேசி எண்கள் இங்கே!

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனூர் காரணம்பேட்டை சாலையில் இருந்த ‘டாஸ்மாக்’ கடையை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடிய அதிகாரிகள், 1.5 கி.மீ. தள்ளி, அய்யன்கோவில் சாலையில் செவ்வாயன்று திறக்க முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாமளாபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

பல்லடம் தாசில்தார் சாந்தி, டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலைய மறுத்த பெண்கள், ‘மதுக்கடையை திறக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்’ என்றனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்த நிலையில் மதியம் 12: மணியளவில், திட்டமிட்டபடி ‘டாஸ்மாக்’ கடை திறக்கப்பட்டது.

அப்போது, அவ்வழியாக குடும்பத்தினருடன் காரில் வந்த சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவரோ, ”முதல்வரிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். இதை ஏற்க மறுத்த பெண்கள், ‘கடையை இன்றே திறக்கக் கூடாது’ என கோஷமிட்டனர்.

நகர முடியாமல் தவித்த எம்.எல்.ஏ., ”மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். மூடாவிட்டால் உங்களுடன் இணைந்து போராடுவேன். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்வேன்” என்றார். இதை ஏற்க மறுத்த மக்கள், ‘தொகுதிக்காக எதையும் செய்யாத உங்களை நம்ப தயாராக இல்லை’ எனக் கூறி அவரை சிறை பிடித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிரடிப்படை போலீசார் வந்தனர். திருப்பூர் எஸ்.பி. உமா, போனில் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, திருப்பூர் தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் என்ற போலீஸ் ரவுடி தலைமையிலான போலீசார், திடீரென ‘பைபர் லத்தி’களுடன் தடியடி நடத்தினர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்களும், பெண்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அருகிலிருந்த கடை, வீடுகளில் புகுந்தவர்களை போலீசார் விரட்டி சென்று சரமாரியாக தாக்கினர். இதில் பலரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பதிலுக்கு சிலர், போலீசார் மீது கற்களை வீசினர். இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தியதை பெண் ஒருவர் கண்டித்தார். இதனால், ஆத்திரம் தலைக்கேறிய போலீஸ் ரவுடியான திருப்பூர் தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அவரை பெண் என்றும் பாராமல், வலது கையால் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். நிலை குலைந்து விழுந்த அந்த பெண்ணை, அருகில் இருந்த பெண்கள் தாங்கி அழைத்து சென்றனர். இக்காட்சியை வீடியோ எடுத்த சிலர், ‘வாட்ஸ் ஆப்’பில் பரவ விட்டனர். அத்துமீறிய அந்த போலீஸ் ரவுடிக்கு சமூக வலைதளங்களில் பச்சை பச்சையாக “புகழ்மாலை”கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவரது காது “குளிர” இவரை “புகழ” விரும்புவோருக்காக இவரது தொலைபேசி எண்களும் சமூக வலைத்தளங்களில் கசிய விடப்பட்டுள்ளன. இவரது தொலைபேசி எண்கள்:- 9442191345, 9498107333, 0421-2482700.

0a

 

Read previous post:
0
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி படத்தில் நடிக்கும் பழம்பெரும் தென்னிந்திய நடிகை!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி, இந்தியாவை பின்புலமாகக் கொண்டு உருவாக்கி வரும் “பியாண்ட் த கிளவுட்ஸ்” (Beyond The Clouds) படத்தில் தென்னிந்தியாவின் பழம்பெரும்

Close